தருமவியாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தருமவியாதன் என்பவர் மகாபாரதத்தில் வருகின்ற கதாப்பாத்திரம் ஆவார். [1] இவர் கௌசிக முனிவருக்கு தர்மத்தினை எடுத்துரைத்தார். [2] [3]

தொன்மம்[தொகு]

கௌசிக முனிவர் தவத்திலிருந்த போது அவர்மேல் கொக்கொன்று எச்சமிட்டது. அதனால் அவர் கோபமாக பார்த்த போது கொக்கு எரிந்தது. அதனால் ஆணவம் கொண்டார். [2]

குளித்துவிட்டு உணவுக்காக ஒரு வீட்டின் முன் பிச்சை கேட்டார். வீட்டிலிருந்த பெண் தன் கணவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்ததால் பொறுத்திருக்கும் படி கூறினாள். தான் பெரிய முனிவன் என்று அறியாமல் காத்திருக்க வைத்தமைக்காக கோபம் கொண்டார். பிச்சையிட வந்த பெண்ணை முறைத்தார். அதற்கு சிரித்துக்கொண்டே அப்பெண் கொக்கொன நினைத்தாயோ கொங்கனவா என்றாள். தான் கொக்கை எரித்ததும், இப்போது கோபம் கொண்டதும் எப்படி அப்பெண்ணிற்கு தெரிந்தது என வியந்தார். அப்பெண் தருமம் குறித்து போதிய ஞானம் நீங்கள் பெறவில்லை. ஞானம் பெற மிதிலை நகரில் தருமவியாதன் என்பவரை சந்தியுங்கள் என்றாள்.[2]

தருமவியாதன் கறிக்கடை வைத்திருக்கும் நபர். அவர் தன்னுடைய பெற்றோர்களுக்கு பணிவிடை செய்தும் கறிக்கடையில் வியாபாரம் செய்தும் வந்தார். கௌசிக முனிவர் அவரைக் காண வந்ததும், அப்பெண் அனுப்பினாராவென வினவினார். இதனை எவ்வாறு தருமவியாதன் அறிந்தாரென கௌதமர் வியந்தார். [2]

ஒவ்வொருவரும் தனக்கான தர்மத்தைக் கடைப்பிடிப்பதே சிறந்த தர்மமாகும். இல்லரத்தில் இருக்கும் பெண் கணவனுக்கக்கு பணிவிடை செய்வதும், வணிகத்தில் பாரபட்சம் பாராது செயல்படுவதும் தர்மமாகும். இவ்வாறு தங்கள் பணியை செய்வது முனிவர்களின் தவத்திற்கு ஒப்பானது என கூறினார் தருமவியாதன்.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. முத்துக்கமலம்
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 தி இந்து
  3. http://www.siruvarmalar.com/mahabharat-stories-list/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.bywiki.com/w/index.php?title=தருமவியாதன்&oldid=2082435" இருந்து மீள்விக்கப்பட்டது