வலைவாசல்:பெண்ணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search



தொகு  

பெண்ணியம் வலைவாசல்


Sikkim 1.jpg

பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு. சமத்துவமின்மையின் மூலங்கள், சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகள், பால் மற்றும் பால்நிலை அடையாளங்களை விமர்சிப்பது, கேள்விக்குட்படுத்துவதற்கான எல்லைகள் போன்றன தொடர்பில் பெண்ணியவாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. பால் அடையாளங்களான ஆண் - பெண் போன்றவை வெறுமனே சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவையே என்ற வாதங்களும் உள்ளன.

பெண்ணியம் பற்றி மேலும்...
புதிய தேர்ந்தெடுப்புகளை காட்டு
தொகு  

சிறப்புக் கட்டுரை


பின்லாந்தில் 1907இல் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற 19 பெண் உறுப்பினர்களுள் 13 பேர். உலகத்திலேயே முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள்  இவர்களே.
பெண்கள் வாக்குரிமை என்பது தேர்தல்களில் பெண்கள் வாக்கு அளிக்கவும், பொதுப்பணிப் பதவிகளில் பங்கேற்க வாக்கெடுப்புகள் வழியாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவும் கொண்டுள்ள உரிமையைக் குறிக்கிறது. பெண்கள் வாக்குரிமையைப் பரவலாக்குவதற்காக எழுந்த பொருளாதார மற்றும் அரசியல் இயக்கங்களும் இதில் அடங்கும்.1979இல் ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட "பெண்களுக்கு எதிரான அனைத்து வேறுபாட்டு ஒதுக்கல்களையும் ஒழித்தல் பற்றிய அறிக்கை"யின்படி, பெண் வாக்குரிமை ஒரு மனித உரிமையாகும்.



தொகு  

பெண்ணிய எழுத்தாளர்கள்


தஸ்லிமா நசுரீன்
தஸ்லிமா நசுரீன் (பிறப்பு: ஆகஸ்ட் 25, 1962) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரும் முன்னாள் மருத்துவரும் ஆவார். 1980களில் எழுதத் தொடங்கி சமயங்களையும் திட்டவட்டமான இஸ்லாமையும் எழுத்துகளில் கண்டனம் செய்து, பெண்ணியத்தைப் பற்றி எழுதி உலகில் புகழுக்கு வந்தார். இஸ்லாமுக்கு எதிராக எழுதினது காரணமாக வங்காளதேசத்துக்கு திரும்பி செல்லமுடியாத நிலையில் சுவீடனுக்கு வெளியேறினார். 2008இல் திரும்பி இந்தியாவுக்கு வந்து உச்ச பாதுகாப்பு நிலையில் தில்லியில் தற்போது வசிக்கிறார்.



தொகு  

பெண்ணியப் போராளிகள்


உ. வாசுகி
உ. வாசுகி இந்திய பெண் அரசியல்வாதிகளில் ஒருவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் மத்தியக்குழு உறுப்பினர் ஆவார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் தமிழ்நாடு மாநிலக்குழுவின் செயற்குழு உறுப்பினரும் ஆவார். மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவர்மகளிர் சிந்தனை என்ற சிற்றிதழின் ஆசிரியருமாவார்.



தொகு  

பெண்ணியம் குறித்த பகுப்புகள்

தொகு  

சாதனைப் பெண்கள்


இராஜேஸ்வரி சண்முகம்
இராஜேஸ்வரி சண்முகம் (மார்ச்சு 16, 1940 - மார்ச் 23, 2012) இலங்கை வானொலி புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார். 1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.




தொகு  

உங்களுக்குத் தெரியுமா...?


Navi Pillay June 2014.jpg


தொகு  

சிறப்புப் படம்


பட விளக்கம்:

ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) தனது காலத்தின் பெண் அடிமை நிலையையும், மற்ற சமூக அவலங்களையும் தனது படைப்புகள் மூலமாக வெளிச்சமிட்டுக் காட்டினார்.

தொகு  

அண்மைய நிகழ்வுகள்


  • பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களில், உலகளவில் 4ஆவது இடத்தில் இந்தியத் தலைநகர் தில்லி உள்ளதாக தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் எனும் செய்தி நிறுவனம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. (தினமணி, 5 நவம்பர் 2014)
தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


Things you can do

  • பெண்ணியம் தொடர்பான விக்கித் திட்டத்தில் உங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  • பெண்ணியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • பெண்ணியம் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • பெண்ணியம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • பெண்ணியம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • பெண்ணியம் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழர்தமிழர்
அரசியல்அரசியல்
வரலாறுவரலாறு
உயிரியல்உயிரியல்
தமிழர் அரசியல் வரலாறு உயிரியல்
"https://ta.bywiki.com/w/index.php?title=வலைவாசல்:பெண்ணியம்&oldid=1749639" இருந்து மீள்விக்கப்பட்டது